• Apr 25 2024

உங்களுக்கு சிறுநீர் தான் வேணுமா? விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்- ரச்சிதாவை மோசமாக பங்கம் பண்ணிய கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

 இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றது. அதில் அசீம் படைத்தளபதி என்ற பெயரில் மோசமாக விளையாடி இருந்தார்.


இதனால் ஏடிகே மற்றும் அசீமுக்கிடையில் பெரிய மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து ராஜாவாக இருந்த ராபர்ட் மாஸ்டர் ராணியாக இருந்த ரச்சிதாவிடம் செய்த சேட்டைகள் பர்வையாளர்களை கடுப்படையவும் செய்தது.அத்தோடு டாஸ்க் நடைபெற்று இருக்கும் போது எனக்கு சிறு நீர் தாங்கள் என ரச்சிதா கேட்டிருந்தார்.


இதனை இன்று சுட்டிக் காட்டிய கமல்ஹாசன் ரச்சிதா அப்படி சொல்லும் போது நாங்க விழுந்து விழுந்து சிரித்தோம். ராபர்ட் அவங்க சிறுநீர் என்று கேட்கும் போது திருத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் கொண்டு வாறேன் என்று போயிட்டார். இது பார்க்கிற எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது சிறு நீர் இல்ல சிறிய நீர் ரச்சிதா என கமல்ஹாசன் கலாய்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement