• Dec 01 2022

சூர்யாவோட உங்களுக்கு பிரச்சினையா?- ஆமாம் இருக்கு- நச்சுனு பதிலடி கொடுத்த இயக்குநர் பாலா

Listen News!
stella / 1 week ago
image
Listen News!

நடிகர் சூர்யா தற்பொழுது தேர்வு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்திருப்பதோடு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வகையில் தற்பொழுது வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

சூர்யா- பாலா கூட்டணி 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது எனலாம். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.


இந்நிலையில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை, அதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

வணங்கான் படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. அதனால் ஒரு வேளை பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை என்பது உண்மை தானோ என பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் தான் வணங்கான் பற்றி பாலா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. வணங்கான் படம் எப்படி வந்துருக்கு என்று பாலாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, வந்துருக்கு இல்ல வந்துட்டு இருக்கு என்றார்.நடுவுல சூர்யாவுக்கும், உங்களுக்கும் இடையே பிரச்சனைனு வந்துச்சே என்று கேட்கப்பட்டது. ஆமாம், உங்களுக்கும், எனக்கும் தான் என பதில் அளித்துவிட்டு சென்றார்.


இது போன்று தக்க பதில்களை அளிப்பது பாலாவுக்கு புதிது இல்லை. எப்படியோ வணங்கான் பட வேலை நிற்கவில்லை. வந்துட்டு இருக்குனு பாலா சொன்னதே போதும் என்று சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.