• Mar 29 2024

பூஜாவுக்கு சாங் போட்டே விருதை தட்டிச் சென்ற டிஜே பிளாக்....வைச்சு செய்த விஜய் டிவி..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

பொதுவாக தமிழ் சினிமாவில் எத்தனையோ சேனல்கள் இருக்கின்றன. அதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது . இதில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மக்களின் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் 1 இல் ஆரம்பித்து தற்போது சூப்பர் சிங்கர் 9 வரை ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சீனியர் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர். திறமை இருக்கும் கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்பு கொடுக்கும் விதமாக இருக்கிறது.தற்போது சூப்பர் சிங்கர் 9 போய்க் கொண்டிருக்கிறது. 

 சூப்பர் சிங்கர் 9 என்று சொன்னாலே சிங்கர்ஸ் பெயர் நம்முடைய ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ கண்டிப்பா டிஜே பிளாக் மற்றும் பூஜா தான் ஞாபகத்துக்கு வருவார்கள். அந்த அளவுக்கு இவர்கள் ரெண்டு பேரும் இதில் பேமஸ் ஆகி விட்டார்கள். ஆனால் இதை இப்படியும் சொல்லலாம் விஜய் டிவி கரெக்டா இவர்களை வச்சு நல்லாவே செய்யறாங்க.

 சூப்பர் சிங்கர் பூஜாவை வைத்து தான்.இவர் பாட வந்தால் அதுக்கு ஒரு சாங், பேசினா ஒரு சாங், பூஜா என்று பெயர் வந்தாலே அதற்கும் ஒரு சாங் இப்படி அவள் தும்மினால் ஒரு சாங், நடந்தால் ஒரு சாங் என்று  பூஜாவை உஷார் பண்ணினது மட்டுமில்லாமல் மக்களிடமும் பெரிதாக ரீச் ஆகிவிட்டார். அதிலும் இவரை என்கரேஜ் பண்ற மாதிரி விஜய் டிவியும் சேர்ந்து பண்ற லூட்டிக்கு அளவே கிடையாது.

 தற்போது நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டில் தூள் மூமண்ட் என்ற விருதை பிஜே பிளாக்கிற்கு கொடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement