• Apr 19 2024

கங்கனா படத்தின் மீது கோர்ட்டில் வழக்கு..? விநியோகஸ்தர் தரப்பு அதிரடி முடிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடைய வாழ்க்கை கதையை மையமாக வைத்து விஜய் இயக்கத்தில் 'தலைவி' படம் உருவானது. இப்படமானது கடந்த 2021 செப்டம்பர் மாதம் வெளியானது. அதுமட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. 

இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலிருந்து பாராட்டுகள் கிடைத்தன. 


இந்நிலையில் இந்த படத்தை உலகளாவிய அளவில் வெளியிட உரிமை பெற்று இருந்த விநியோக நிறுவனம் படம் எதிர்பார்த்த வசூல் ஈட்டாததால் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது. இதனால் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கிய ரூ.6 கோடியை திருப்பி தருமாறு கேட்டு பட விநியோகஸ்தர் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. 


அதுமட்டுமல்லாது இதுகுறித்து தயாரிப்பாளருக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி கொடுக்காததால் விநியோகஸ்தர் தரப்பில் ரூ.6 கோடியை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்து இருப்பதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement