தனுஷை தெலுங்கு சினிமாவிற்குள் கம்பளம் போட்டு வரவேற்கும் இயக்குநர்கள்

184

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இயக்குனர் பாடகர் பாடலாசரியர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையை தன்னகத்தே கொண்டுவிளங்குகிறார். எப்போதுமே பிஸியாக தமிழ் சினிமாவில் நடித்துவரும் தனுஷ் . தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். தற்போது தனுஷை தெலுங்கு சினிமாவோ சிவப்பு கம்பள வரவேற்பு தருகிறது.

ஊரடங்கு நேரத்தில் தமிழில் வெளியான கர்ணனும் ஜகமே தந்திரமும் பலதரப்பட்ட பாராட்டுக்களை பெற்றது . அதே தருணத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் மாறன் படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தெலுங்கு இயக்குனர் சுரேஷ் கும்மாலாவும் அவர் பங்கிற்கு தனுஷிடம் கேட்க சட்டென சம்மதம் தெரிவித்தாராம் .அடுத்து நிதின் கீர்த்தி சரேஷ் நடிப்பில் ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி ஒரு படத்திற்காக பேசியுள்ளாராம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவலும் கசிந்துள்ளது .

இந்நிலையில் மற்றுமொரு தெலுங்கு இயக்குனரு கதை சொல்லியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது . இந்நிலையில் தனுஷ் அடுத்தடுத்து பல தெலுங்கு படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல தெலுங்கு இயக்குநர்களும் தனுஷை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என குறியாக இருக்கிறார்களாம்.