• Apr 19 2024

விஜய்யின் தந்தையிடம் அடி வாங்கிய இயக்குநர் ஷங்கர்…காரணம் என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'தொட்டதெல்லாம் தங்கம்' என்று கூறுமளவிற்கு பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். அந்தளவிற்கு வெற்றிப்படங்களை கொடுக்கக் கூடிய ஒருவராக விளங்கி வருகின்றார். இவர் எந்தக் கதையை படமாக எடுத்தாலும் அந்தக்கதை மக்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடும்.

பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களின் படங்களிற்கே ரசிகர் கூட்டம் அதிகம் உண்டு. ஆனால் ஒரு இயக்குநரின் படத்தை எதிர்பார்த்தே ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கு என்றால் அது நம்ம ஷங்கரின் படம் தான். 'ஜென்டில் மேன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல பல வெற்றிப் படங்களை திரையுலகிற்கு கொடுத்திருக்கின்றார்.

இவ்வாறாக படத்திற்கு படம் ஹிட் கொடுத்து வசூலில் மாபெரும் சாதனை படைத்து வரும் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகின்றார். அதுமட்டுமன்றி ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து படங்களை இயக்கிய ஷங்கரும் இவர்களைப் போன்று நடிகராக வருவதற்கே முதலில் ஆசைப்பட்டிருக்கின்றார்.

தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் மேடை நாடகங்களில் மட்டுமே நடித்து வந்த ஷங்கர் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பார்வையில் பட அவர் மூலமாக திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷங்கர் அவரின் பல படங்களில் அவரோடு இணைந்து வேலை செய்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரான சரண்ராஜ் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இயக்குநர் ஷங்கரை பற்றி பேசியுள்ளார். ஷங்கருக்கும் சரண்ராஜ்ஜிற்கும் உள்ள முக்கிய தொடர்பு என்னவெனில் ஷங்கரின் முதல் படமான 'ஜெண்டில் மேன்' இல் சரண்ராஜ் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்வில் சரண்ராஜ் பேசும் போது, பிரபல நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ஒரு படத்தில் சரண்ராஜ் நடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஷங்கர் பலமுறை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அடி வாங்கியுள்ளதாக சரண் ராஜ் கூறியுள்ளார். மேலும் சரண்ராஜிடம் ஷங்கர் சில சமயங்களில் இது தொடர்பாக புலம்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்பது போல இன்று தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் நம்ம ஷங்கரும் இயக்குநர் ஷங்கரிடம் அடி வாங்கித்தான் இந்தளவிற்கு முன்னேறியிருக்கிறார் என்றால் பாருங்களன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement