தனது திரைப்பட கதாநாயகியின் பிறந்தநாளுக்காக போஸ்டர் அடித்த இயக்குனர் ஷங்கர்.

291

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கியவர் என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய் ரஜினி விக்ரம் என்பவர்களை வைத்து இயக்கிய அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பதும் முக்கியமாகும்.

மேலும் இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், கியாரா அத்வானி தனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று படக்குழுவில் இணைந்திருக்கிறார்.

அத்தோடு இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அவரை வரவேற்று இருக்கிறார்கள்.மேலும் கியாரா அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்தப் போஸ்டரே தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.