• Mar 29 2024

மாவீரன் பட பூஜையில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர்- டிரெண்டாகும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது பிரின்ஸ் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு தெலுங்கில் மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது

மாவீரன் படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அத்தோடு பிரின்ஸ் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள நிலையில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பானது நேற்றைய தினம் பூஜையுடன் ஆரம்பித்தது.

இந்த பூஜையில் இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார். மேலும் அங்கு நடந்த சடங்குகளிலும் பங்கு கொண்டு மாலை அணிந்து கொண்டார். மேலும் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஸ்வின் ஆகியோருடன் கலந்துரையாடல் செய்யும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிதி ஷங்கர் தற்போது விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement