• Mar 23 2023

விஷாலின் '' மார்க் ஆண்டனி'' திரைப்படத்தில் இணையும் இயக்குநர் செல்வராகவன்!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் ஆக்சன் பிளாக் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் விரைவில் லண்டனில் தொடங்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். 

இதனிடையே விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. யே விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement