நீட் தேர்வு மரணங்களுக்கு நமது உறுதியற்ற நிலைப்பாடே காரணம் பா.ரஞ்சித் டவிட்!

68

தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நீட் தேர்வு பயத்தினால் தனுஷ் என்ற மாணவரும், கனிமொழி, செளந்தர்யா என்ற மாணவியரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் நீட் தேர்வு குறித்து ட்விட் செய்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

”நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தினால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல் பட்டு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்! #BanNeet” என்று பதிவிட்டுள்ளார்.