• Sep 22 2023

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலத்துடன் கைகோர்த்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார்- அடடே இந்த நடிகருடனா?

stella / 6 days ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கிய ஜெயிலர், அப்பா-மகன் உறவை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி நகைச்சுவைப் படமாகும். இப்படம் இந்த ரஜினிகாந்த்-வசந்த் ரவி பிணைப்பில் ஒரு சதித் திருப்பத்துடன் வருகிறது, மேலும் ஃபீல் ஆஃப் ஜெயிலர் அதைப் பற்றிய ஒரு காட்சியை அளிக்கிறது.லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது.


கவின் இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன.இப்போது புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கவின்.அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தானாம்.


இப்படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டனவாம். இப்போதைக்கு நெல்சன் அலுவலகத்திலேயே இந்தப்படத்தின் வேலைகள் நடக்கின்றன என்கிறார்கள்.விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement