• Mar 26 2023

''இந்த தடவை வேற மாதிரி''- இயக்குநர் மோகன் ஜி போட்ட வைரல் பதிவு!

Jo / 6 days ago

Advertisement

Listen News!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குநர் மோகன்.G. ஜி.

இயக்குநர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார்.

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM  நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம், இயக்குநர் மோகன் ஜி-க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார். 

மேலும் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement