• May 29 2023

இயக்குநர் மணிரத்தினத்திற்கு இந்த விஷயம் பிடிக்காதா?- பொன்னியின் செல்வன் படத்திற்கு கூட பண்ணலையா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வருகிறார். இவர் கன்னடத்தில் “பல்லவி அனு பல்லவி” என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அதன் பின் மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம், தமிழில் “பகல் நிலவு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து “மௌன ராகம்”, “நாயகன்”, “அக்னி நட்சத்திரம்”, “அஞ்சலி”, “தளபதி” ஆகிய வெற்றித்திரைப்படங்களை கொடுத்த மணிரத்னம், “ரோஜா” திரைப்படத்தின் மூலம் இந்திய இயக்குனராக அறியப்பட்டார். இத்திரைப்படம் ஹிந்தியிலும் பயங்கர ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


அதன் பின் பல ஹிட் திரைப்படங்களை இயக்கினார் மணிரத்னம். அவரது திரைப்படங்களில் வசனங்கள் மிகவும் சுருக்கமாக இருக்கும். மேலும் காதல் காட்சிகளை மிகவும் அழகாக படமாக்குவார். குறிப்பாக அவரது திரைப்படங்களில் கேமரா கோணங்கள் அசரவைக்கும்படியாக இருக்கும்.இந்த நிலையில் மணிரத்னம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 


அதாவது மணிரத்னம் எந்த வித சடங்கு சம்பிரதாயங்களின் மீதும் நம்பிக்கையற்றவராம். திரைப்படத்திற்கு பூஜை கூட போடமாட்டாராம். ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கேமராவின் முன்னே தேங்காயின் மேல் சூடம் ஏற்றி உடைப்பது வழக்கம். ஆனால் அப்படி செய்தால் மணிரத்னத்திற்கு பிடிக்காதாம். கோபம் தலைக்கேறிவிடுமாம். இவ்வாறு ஒரு மேற்கத்திய சிந்தனை கொண்ட இயக்குநராக மணிரத்னம் திகழ்ந்து வருகிறார்.


Advertisement

Advertisement

Advertisement