• Apr 19 2024

இயக்குநர் அட்லீக்கு ரூ. 400 கோடி பரிசு கொடுத்த விஜய்...அப்பிடி என் பரிசு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர்  தான் இயக்குநர் அட்லி.ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லிக்கு ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி படங்களாக ஹிட் கொடுத்தது.

தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார்.இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார். 

அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.அத்தோடு  அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

மேலும் இயக்குநர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி அறிவித்தனர்.

நேற்று பிரம்மாண்டமான முறையில் பிரியா அட்லீக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய்யும் வந்திருந்தார். அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாகவும் தந்தார்.

இந்த ஓவிய பரிசுடன்  நிறுத்தாமல் ரூ. 400 கோடி பதிப்பிலான மற்றொரு பரிசையும் கொடுத்துள்ளார் விஜய். ஆம், தளபதி 68 படத்தை அட்லீக்கு கொடுத்துள்ளாராம்.

அத்தோடு சன் பிக்சர்ஸ் - விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 400 கோடி என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான அக்ரீமெண்ட் சமீபத்தில் போடப்பட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement