கொரோனாத் தொற்றோடும் தனது மனைவியின் இறுதிச் சடங்கை நிறைவேற்றிய இயக்குனர் அருண்ராஜா காமராஜா

534

கடந்த சில மாதங்களாக கொரோனாத் தொற்றின் இரண்டாம் அலையானது இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இந்நியாவை மிகவும் மேசமான நிலையில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் பொதுமக்கள் எனப் பலரையும் காவு கொண்டு அனைவரையும் பேரதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது.

அதிலும் கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா பிரபலங்களின் மரண செய்திகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன.அந்தவகையில் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குனரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அத்தோடு ஏற்கனவே அருண்ராஜா காமராஜா அவர்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இவரது மனைவியின் இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

மேலும் இவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மின் மயானத்திற்கு வந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அருண்ராஜா PPE உடை அணிந்து தனது மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.அவரின் அந்த சோக நிலையை பார்த்து மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: