• Mar 28 2023

குறைகிறது விஜய்சேதுபதியின் மார்க்கெட் ; கோடிகளை கேட்பதால் குழப்பம் !

ammu / 1 month ago

Advertisement

Listen News!

சுந்தர்.சியின் அரண்மனை 4 ல் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அவர் அந்த படத்தை விட்டு விலகி விட்டார் என்றும் இவர் நடிக்க இருந்த கேரெக்ட்டரிற்கு சுந்தர்.சி நடிக்க போகிறார் என்றும் ஒரு தகவல் புதிதாக வெளிவந்துள்ளது.


விஜய் சேதுபதி வெளியில் மற்றவர்களிடம் 15 கோடி சம்பளம் கேட்கிறாராம். அவர்களும் கொடுக்கிறார்களாம். இதையடுத்து அரண்மனை 4ல் நடிப்பதற்கு 12 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். இதற்கு சுந்தர்.சி 5 கோடி தருவதாகவும் 40 நாள் நடித்தால் போதும் என்று கூறியதால் விஜய் சேதுபதி விலகி விட்டாராம். 


இவர் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விற்கு சுந்தர்.சி "விஜய் சேதுபதிக்கு பிசினஸ் இல்லை. இவரின் மார்க்கெட்டை இவரே கெடுத்து கொள்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்" என்று கூறினார். சமுத்திரக்கனி நடித்த சங்கத்தலைவன் படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் 12 கோடிக்கு போயிருக்கிறது என்ற தகவல் வெளியானது. 


இந்த வகையில் விஜய் சேதுபதி நடித்து வெளி வராமல் இருக்கும் யாதுமூரே யாவரும் கேளீர் என்ற படத்தின் சாட்டிலைட் டிஜிட்டலை வெறும் 3 கோடிக்கே கேட்கின்றனர். அந்தளவிற்கு இவரின் மார்க்கெட் ரொம்பவே குறைஞ்சிருக்கு என்று பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement