நடிகர் நாகசைத்தன்யா சமந்தாவைத் திருமணம் செய்து கொள்ள முதல் ஸ்ருதிஹாசனைத் தான் காதலித்தாரா?- தீயாய்ப் பரவும் செய்தி

885

தென்னிந்திய சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக உயர்ந்த பல நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகர் நாகசைத்தன்யா. இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவின் மகன் என்பதோடு தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அத்தோடு இவர் நடிகை சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெறப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். அந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இருவரும் அவரவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதி ஹாசனை காதலித்தார் நாக சைதன்யா என்றும், அவரை திருமணம் செய்ய விரும்பினார் என்றும் தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. அதாவது 2013ம் ஆண்டு நாக சைதன்யாவும், ஸ்ருதியும் சந்தித்தார்களாம். முதலில் நட்பாக இருந்த அவர்கள் பின்னர் காதலர்கள் ஆனார்களாம். பிரிக்க முடியாத அளவுக்கு அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டதாம்.

தொடர்ந்து காதல் வலுவாக சென்று கொண்டிருந்தபோது நாக சைதன்யா, ஸ்ருதி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். அதன் பிறகே சமந்தாவை காதலித்து மணந்தார் சமந்தா என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.