• Apr 24 2024

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் தோனியின் மனைவி சாக்ஷியும் ஒன்றாகப் படித்தவர்களா?- வெளியாகிய சுவாரஸியமான தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த ஒரு மாதமாக அனைவருக்குமே ஐபிஎல் காய்ச்சல் இருந்தது. தோனிக்கு இது கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் எப்படியாவது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் நினைத்தனர்.

 நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின. போட்டியானது அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.


நேற்று முன் தினம் நடைபெற வேண்டிய போட்டி மழை காரணமாக நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இதனையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருப்பதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், தோனியின் மனைவி சாக்ஷியும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார்கள் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அனுஷ்காவின் தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான அஜய் குமார் சர்மாவுக்கு அஸ்ஸாமில் போஸ்டிங் போட்டிருக்கிறார்கள்.


அப்பொழுது தான் அங்கிருக்கும் புனித மேரி பள்ளியில் மகளை சேர்த்திருக்கிறார் அஜய் குமார் சர்மா. அதே பள்ளியில் தான் சாக்ஷி சிங் படித்திருக்கிறார். பள்ளி விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.மற்றொரு புகைப்படத்தில் சக மாணவ, மாணவியருடன் இருக்கிறார்கள் அனுஷ்காவும், சாக்ஷியும். இன்னொரு புகைப்படத்தில் நண்பர்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

சாக்ஷின் தோனி குறித்து அனுஷ்கா சர்மா பேட்டி ஒன்றில் கூறியதாவது,

சாக்ஷியும், நானும் அஸ்ஸாமில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் வசித்தோம். அஸ்ஸாமில் எங்கே இருந்தோம் என்பதை சாக்ஷி தெரிவித்தார். அதை கேட்ட நானோ, நானும் அதே ஊரில் தான் இருந்தேன் என்றேன். அதன் பிறகு தான் படித்த பள்ளியின் பெயரை கூறினார். நானும் அந்த பள்ளியில் தான் படித்தேன் என்று சாக்ஷியிடம் கூறினேன்.


அதன் பிறகே பழைய புகைப்படம் ஒன்றை பார்த்தேன். அதில் சாக்ஷி சிங் தேவதை போன்று கெட்டப்பில் இருந்தார். நான் காக்ரா அணிந்து எனக்கு பிடித்த மாதுரி தீக்ஷித் போன்று இருந்தேன். அது மாறுவேட போட்டியின்போது எடுக்கப்பட்டது என்றார்.அடடே, கோஹ்லியின் மனைவியும், தோனியின் மனைவியும் தோழிகள் என்பது தெரியாமல் போச்சே என்கிறார்கள் ரசிகர்கள். கணவர் தோனியின் கெரியருக்கு ஆதரவாக இருந்து வருகிறார் சாக்ஷி.

இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார் அனுஷ்கா சர்மா. சாக்ஷிக்கு ஜிவா என்கிற மகள் இருக்கிறார். அனுஷ்கா சர்மாவுக்கு வாமிகா என்கிற மகள் இருக்கிறார்.

சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தோனி. அனுஷ்கா சர்மா, கோஹ்லியின் காதல் கதை மிகவும் பிரபலமாகும். ஒரு கட்டத்தில் அனுஷ்காவும், கோஹ்லியும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தார்கள். அப்பொழுது கோஹ்லி தான் அனுஷ்காவின் சகோதரர் மூலம் அவரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டார் என அப்பொழுது செய்திகள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement