பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வர முதல் இந்த நடிகர் சன் மியூசிக்கில் பணி புரிந்தாரா? – அதுவும் மணிமேகலையுடனா?

435

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் பரபரப்பு ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

மேலும் தற்பொழுது இந்த சீரியலில் இவர்களது அம்மா இறந்து விடுகின்றார். இந்த செய்தி சீரியல் பார்ப்பவர்களையே கண்கலங்க வைத்துள்ளது. அத்தோடு இந்த வாரமும் ரி ஆர் பி யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் இடம்பிடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றமையையும் காணலாம்.

இந்நிலையில் இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் வெங்கட், இவர் இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சீரியலில் நடித்து பிரபலமாவதற்கு முன்னால் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். அவருடன் சின்னத்திரை பிரபலம் மணிமேகலையும் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். தற்பொழுது இவர் தொகுப்பாளராக இருந்த புகைப்படமே வைரலாகி வருவதையும் காணலாம்.