• Mar 29 2024

துருவ் விக்ரம் படத்தை டிராப் பண்ணி விட்டார்களா... 2வருஷம் ஆகியும் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படாதது ஏன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கற்றது தமிழ், தங்கமீன்கள்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஒருவரே மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படத்தின் மூலமாகவே முதன் முதலில் இயக்குநராக அறிமுகமானார். 


மேலும் பா.இரஞ்சித் பிரமாண்டமாகத் தயாரித்த இப்படமானது மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று பல்வேறு விருதுகளையும் வென்று வாரிக் குவித்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த 'கர்ணன்' என்ற படத்தை இயக்கினார். இப்படமானது கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்று வசூல் சாதனையும் செய்திருந்தது. 

இந்நிலையில் கர்ணன் படத்தின் ஷூட்டிங் அமோகமாக நடைபெற்று வந்த சமயத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகி இருந்தார். இப்படத்தையும் பா.இரஞ்சித் தான் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கெனவே கூறப்பட்டது. 


இவ்வாறாக கர்ணன் படத்தை முடித்த கையோடு துருவ் விக்ரமின் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

எனினும் தற்போது மாமன்னன் படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், அவர் அடுத்ததாக துருவ் விக்ரம் படத்தை தான் இயக்குவார் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் மாரி செல்வராஜ்ஜோ தான் அடுத்ததாக கலையரசன் நடிக்கும் 'வாழை' என்ற படத்தை இயக்க உள்ளதாகக் கூறி மீண்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

வாழை படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானதும் நெட்டிசன்களில் பெரும்பாலானோர் எழுப்பிய ஒரே ஒரு கேள்வி துருவ் விக்ரம் படம் என்ன ஆனது என்பது தான். இதனைத் தொடர்ந்து ஒரு சிலரோ அப்படத்தை மாரி செல்வராஜ் டிராப் பண்ணிவிட்டதாகக் கூறி வதந்திகளை பரப்பினர்.


இந்நிலையில் இது தொடர்பான மற்றோர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதாவது உண்மையில் துருவ் விக்ரம் படம் டிராப் ஆகவில்லையாம். வாழை படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் தான் துருவ் விக்ரம் படத்தின் பணிகளை மீளவும் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மாரி செல்வராஜ்.

இதற்கான காரணம் என்னவெனில் அது கபடி வீரரை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதால் அதற்கான பயிற்சியை துருவ் விக்ரம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்கு நேரம் எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement