• Feb 02 2023

வாரிசு-துணிவு படங்கள் உலகளவில் 100 கோடி வசூல் செய்ததா? வெளியானது தகவல்!

Listen News!
Jothika / 2 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் வாரிசு - துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஜனவரி 11-ஆந் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்  வெளிவந்தது. இந்த இரு திரைப்படங்களில் எந்த படம் பொங்கல் வின்னர் என சமூக வலைத்தளத்தில் பெரும் சண்டையே நடந்து வருகிறது என்றே சொல்லாம்.

இந்நிலையில், வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துணிவு சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. உலகளவில் துணிவு  மூன்று நாட்களிலேயே ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது .



எனினும்,உண்மை நிலவரம் என்னவெனில், 4 நாட்கள் முடிவில் தான் துணிவு மற்றும் வாரிசு ரூ. 100 கோடியை உலகளவில் கடந்து வசூல் செய்துள்ளன.

 இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்திருந்த 4 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்து வெற்றி நடை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement