• Apr 18 2024

அஜித் பட டைட்டிலை காப்பியடித்தாரா பிரபல இயக்குநர்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

புதிய படத்திற்கு அஜித்தின் தலைப்பை வைத்த இயக்குநர் ஷிவ்மோஹா.கதிர் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடிக்கும் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘இஷ்க்’ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகின்றது.

மேலும் இந்த படத்தில் நடிகர் கதிர் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஜீரோ படத்தை இயக்கிய ஷிவ்மோஹா இயக்கி வருகின்றார். ஈகில் ஐ புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக  தற்போது நடைபெற்று வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மேலும்  இந்த போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.



மேலும் இந்த படத்திற்கு ஆசை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் கடந்த 1995-ஆம் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ஆசை’ திரைப்படத்தின் தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளனர். காதல் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement