• Apr 25 2024

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகை... திருமணத்தின் போது வயிற்றில் இத்தனை மாதக் குழந்தை இருந்ததா...?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிககளில் ஒருவராக இன்றும் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்து நிற்பவர் நடிகை ஸ்ரீதேவி ஆவார்.

இவர் 1967-ஆம் ஆண்டு வெளியான ‘கந்தன் கருணை’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் கால் பதித்தார்.


அதனைத் தொடர்ந்து பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 


மேலும் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளிவந்த 'மூன்றாம் பிறை' என்ற திரைப்படமானது பல சாதனைகளைப் பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்ததோடு இப்படத்தில் கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல் திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியது எனக் கூறலாம்.


இவ்வாறாக படங்களின் வாயிலாகவும், தன்னுடைய அழகின் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வந்த ஸ்ரீதேவி கடந்த 1996-ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என அழகிய இரு மகள்கள் உள்ளார்கள்.


சினிமா, குடும்பம் என மிகவும் சந்தோசமாக இருந்து வந்த ஸ்ரீதேவி கடந்த 2017-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவர் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் பலரின் நினைவில் இருந்து நீங்காத இடத்தை பிடித்து வருகின்றார்.


இந்நிலையில் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்கள் தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஒரு காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரையில் எப்போதும் சர்ச்சையானதாகவே இருந்திருக்கிறது.

அந்தவகையில் தற்போதும் ஒரு செய்தி இணையத்தில் கசிந்திருக்கின்றது. அதாவது திருமணத்திற்கு முன்பே ஸ்ரீதேவி கர்ப்பமாகி விட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனை அவரே வெளிப்படையாக முன்னர் ஒருமுறை ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

அதாவது அவருக்கு தயாரிப்பாளர் போனி கபூர் உடன் திருமணம் நடந்த போது அவரது வயிற்றில் 7 மாத குழந்தை இருந்ததாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement