• Mar 28 2024

தோல்வியடைந்த மாற்றான் படத்திற்காக சூர்யா இத்தனை கோடி சம்பளமாகப் பெற்றாரா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருவதில் முனைப்புக் காட்டி வரும் நடிகர் தான் சூர்யா இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடி வாசல் படத்தில் நடித்து முடிக்கவுள்ளார். இப்படங்கள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


சூர்யாவின் திரை வாழ்க்கையில் பெரிதும் எதிர்பார்த்து சறுக்கலை சந்தித்த திரைப்படம் தான் மாற்றான். இப்படத்தில் ஒட்டி பிறந்த இரட்டையாளராக நடித்து அசத்திருந்தார் சூர்யா.இதனாலேயே இப்படத்தின் மீதி எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் இருந்தது. 

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை.ஆனால், தற்போது இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ரூ. 18 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகர் சூர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement