• Apr 25 2024

பஸ் Fight சீன் எடுக்க இப்படியொரு நிஜசம்பவம் நடந்திருக்கா..? உண்மையை உடைக்கும் ஹெச் .வினோத்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குநராக  கால் பதித்தவர் எச்.வினோத். அதன்பின்னர், தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை வினோத் இயக்கி இருந்தார். சமீபத்தில் ஹெச்.வினோத், அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் பிரத்தியோ ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அப்போது, பல விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நிகழ்ச்சியில் அவருடைய இயக்கத்தில் வெளியான படங்களில் வரும் சண்டை காட்சிகள் வடிவமைப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வரும் பஸ் சண்டை காட்சிகள் குறித்து சுவாரஸ்ய சம்பவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

மேலும் இதுபற்றி அவர் பேசுகையில்,"பஸ் -ல வச்சு ஒருத்தரை போலீஸ் சீக்ரட்டா அரெஸ்ட் பண்ணிருக்காங்க. ராஜஸ்தான்-ல ஒரு இடத்துல மாறுவேஷத்துல டிராவல் பண்ண ஒரு ஆளை பஸ்-அ நிறுத்தி போலீஸ் கைது பண்ணிருக்காங்க. அந்த ஆளு 'எங்கிருந்தோ வந்தவர் என்னை அரெஸ்ட் பண்றாரு, நீங்க எல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க'-ன்னு அங்கிருந்த மக்கள்கிட்ட சொல்லி, பிரச்சனை வந்திருக்கு. அதுக்கு அப்புறம், மக்கள் எல்லாம் போலீசை அடிக்க வந்து அப்போது போலீஸ் அதிகாரிகள் உண்மையை சொல்லி புரியவச்சிருக்காங்க. ஆனா, அங்கிருந்த அந்த ஆளு தப்பிச்சு ஓடிப்போக, போலீஸ் சேஸ் பண்ணி அவரை பிடிச்சிருக்காங்க. அந்த சீன்ல சண்டையை மட்டும் உள்ளே எடுத்துட்டு வந்தேன்" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய படங்களில் கதாநாயகனின் பாடிலாங்குவேஜ்- குறித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் முன்பே கலந்தாலோசிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறினார். அதேபோல, தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே வலிமை படத்தில் வரும் சண்டை காட்சிகள் மிகவும் பிடிக்கும் எனவும் குறிப்பாக கிளைமேக்சில் வரும் சண்டை காட்சி தனக்கு விருப்பமான ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement