• Sep 27 2022

கணவர் துன்புறுத்தியதால் தான் சில்க் ஸ்மிதா நடிக்க வந்தாரா?- இதுவரை யாரும் அறிந்திடாத சுவாரஸியமான விடயங்கள்

Listen News!
stella / 3 days ago
image
Listen News!

80 களில் இருந்து 90 கள் வரை, தென்னிந்தியத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த கவர்ச்சி நடிகை தான் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், எனப் பல மொழிகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால் போன்ற தென்னகத்தின் சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்திருக்கின்றார.

இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி வடல்பட்டி. பண நெருக்கடி காரணமாக நான்காம் வகுப்பிற்குப் பின்னர் இவரால் படிப்பை தொடர முடியவில்லை.இதனால் இளம் வயதிலேயே இவருக்கு திருமணமும் நடந்தது. இந்த திருமண வாழ்க்கை அவருக்கு சிறிதளவு கூட மகிழ்ச்சியை தரவில்லை, கணவரும், கணவர் வீட்டாரும் அடித்து துன்புறித்தியதால் மிகவும் மனம் உடைந்த போனார்.


 இதனால் வீட்டை விட்டு வெளியேறி, நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு ஓடினார்.ஒரு டச்-அப் கலைஞராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார், நடிப்புக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால், ஒரு கட்டத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடத்தொடங்கினார்.

 17 வருட சினிமா வாழ்க்கையில், 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஐட்டம் டான்சராக மட்டும் இல்லாமல், ஒரு சிறந்த நடிகையாகவும் இருந்ததால், இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.


அவர் நடித்த படங்கள் மற்றும் ஆடிய ஐட்டம் பாடல்கள் என அனைத்தும் தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆனாலும், ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் படம் தயாரிக்க தொடங்கினார் சில்க். ஆனால் அவர் படத் தயாரிப்பில் ரூ.2 கோடி வரை நஷ்டத்தைச் சந்திக்க நேரிட்டதாகவும், அது அந்தக் காலத்தின் படி மிகப்பெரிய தொகை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குடி பழக்கத்துக்கு ஆளானார். மது அருந்திவிட்டு ரகளை செய்து சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.இறுதியாக, கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அன்று, சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.


 லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டிப் பறந்த சில்கின்  மரணத்தை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றுவரை அவரது மரணத்தில் உள்ள மர்மம் தீர்க்கப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சிலர் சந்தேகிக்கின்றனர்.

இவரது வாழ்க்கையை வைத்து இதுவரை மூன்று படங்கள் வெளியாகியிருந்தாலும், அதில் கடந்த 2011ல் வெளியான 'தி டர்ட்டி பிக்சர்' மட்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%