ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க நயன்தாராவும் ஆசைப்பட்டாரா?- இது எப்போ நடந்தது

146

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமானவர். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது அவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்தில் இவருடன் விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அத்தோடு சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வரும் இவர் நடிப்பில் வெளிவந்த மாயா, நெற்றிக்கண், அறம் உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கு, மூத்த முன்னணி நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆனால், ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் தலைவி எனும் தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகிவிட்டது . இதனால் நயன்தாராவால் நடிக்க முடியாமல்ப் போனதும் குறிப்பிடத்தக்கது.