• Apr 25 2024

துணிவு படத்தில் நடிக்க மஞ்சுவாரியார் வாங்கி சம்பளம் இத்தனை கோடியா? வெளியான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் வங்கியில் நடக்கும் சுரண்டல்களைப் பற்றியும், மக்களின் பணம் எவ்வாறு சூரையாடப்படுகிறது என்பதைப் பற்றியும் தோலுரித்து காட்டி இருந்தனர்.

அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், வீரா, அமீர், பாவனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தார்கள்.பொங்கலுக்கு ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் கலெக்‌ஷனை அள்ளி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் அஜித்துக்கு வெளிநாட்டில் மவுசு அதிகரித்து உள்ளது.


இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மஞ்சுவாரியாருக்கும் தமிழில் நல்லதொரு கம்பாக்காக அமைந்துள்ளது. மஞ்சுவாரியார் இதற்கு முதல் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமாகினார்.


துணிவு படத்தினைத் தொடர்ந்து தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை மஞ்சு வாரியர் சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement