• Apr 26 2024

இசையமைப்பாளராக மாறிய தோனி.. சிஎஸ்கே வெளியிட்ட செம வைரல் வீடியோ இதோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கிரிக்கெட்டின் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி இசையமைப்பாளராக மாறி, கிடார் இசைக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இதற்கான பயிற்சிகளில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டு வருகிறது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் அணியுடன் மோதுகிறது என்பதும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தோனி, ருத்ராஜ், தீபக் சஹார், உள்பட பலர் தற்போது சென்னையில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வரும் நிலையில் ஓய்வு நேரத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோக்களையும் அவ்வப்போது சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

அதில் தோனி கிட்டார் வாசிக்க அந்த இசைக்கேற்ப சக சிஎஸ்கே வீரர்கள் டான்ஸ் ஆடியபடி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவும் உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது தல தோனி இன்னும் இளமையாகவே இருக்கிறார் என்றும் இந்த ஆண்டும் அவர் தனது பேட்டிங்கில் அசத்துவார் என்றும் தகவல் சொல்லபப்டுகிறது.


Advertisement

Advertisement

Advertisement