• Sep 13 2024

மீண்டும் ரிலீஸாகும் தனுஷின் VIP Movie - எப்போ தெரியுமா? செம ஹப்பியில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடித்து 2014-ம் ஆண்டு வெளியான படம் தான் ‘வேலையில்லா பட்டதாரி’. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படத்தில் அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


தமிழ் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் செம ஹிட் கொடுத்த படம் இது என்றே சொல்லலாம்..அதனை போல இதுவும் தனுஷ் கேரியரை உச்ச்சத்துக்கு கொண்டு சென்ற படமாகும்.

இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருந்தார். தமிழில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் ‘ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.அங்கும் வேற லெவல் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரும் 18ம் தேதி மீண்டும் வெளியாகிறது. சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ படம் தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகி மிக பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் தனுஷின் இந்தப் படத்தையும் அங்கு மீண்டும் வெளியிடுகின்றனர் இதனால் தனுஷின் அங்குள்ள ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..எனவே மேலதிக அப்டேட் வெளியாகும் வரை காத்திருப்போம்.


Advertisement

Advertisement