• Apr 23 2024

தனுஷ் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை... இத்தனை கோடியா... வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தன்னுடைய திறமையான நடிப்பினாலும், கடின உழைப்பினாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். இவரின் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். 


அந்தவகையில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள 'வாத்தி' திரைப்படமானது வருகிற 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷினுடைய கார் விபரம் பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இவர் மொத்தம் ஐந்து சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார். இதில் கோடிக்கணக்கில் பதிப்புடைய இரண்டு கார்கள் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கின்றது.


அந்தவகையில் இதில் முதலாவதாக தனுஷ் பயன்படுத்தி வரும் ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் இடம்பிடித்துள்ளது. ரூ. 7 கோடி பதிப்பிலான இந்த காரை தமிழ் திரையுலகில் ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ரூ. 3.20 கோடி பதிப்பிலான பேண்டிலி எனும் கார் உள்ளது. இவை மட்டுமல்லாது ரூ. 1.20 கோடி பாதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் தனுஷ் பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கார்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

1.ரோல்ஸ் ராய்ஸ் கார் 


2.பேண்டிலி


Advertisement

Advertisement

Advertisement