• Apr 20 2024

தனுஷின் 50 ஆவது படம்; அனிருத்தை விலக்கி முக்கிய பிரபலத்துடன் கூட்டு!

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தானே தனது இயக்கத்தில் தனது 50 வது படத்தை எடுக்க உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் அமோகமாக வெற்றி பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ.51 கோடி வசூலித்து பெரிய அளவில் சாதனை படைத்து இருந்தது. 


வாத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமும் இவரிற்கு வெற்றியை கொடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 


இந்நிலையில் தனுஷ் தனது 50 வது படத்திற்கான ஆயத்தங்களை தொடங்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதோடு இப்படத்தை நடிகர் தனுஷ் தான் இயக்க உள்ளாராம். 


ஏற்கனவே பா.பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ள தனுஷ், இப்படம் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.


இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி ஏற்கனவே தனுஷ் நடித்த மரியான், ராஞ்சனா மற்றும் அட்ரங்கிரே போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இவரின் 50 வது படத்திற்கும் இசையமைக்க போகிறார் என்று தகவல் கூறப்படுகிறது.  டி50 படம் மூலம் தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 4 வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளது.


நடிகர் தனுஷ், இப்படத்திற்கு அனிருத்தை தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஏனெனில் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளிவந்த 3, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பாடல்கள் பெரும் ஹிட் ஆனது. இதனால் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்கள் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிட்டியது.


எனவே தனுஷின் 50 வது படத்திற்காக இப்பவே ரசிகர்கள் ஆவலாக இருக்க போகிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவரின் அடுத்தடுத்த படங்களும் வெற்றி அடையுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement