இதுவரை முதல் முறையாக 17 மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ள தனுஷ் படம்

123

தமிழ் சினிமாவில் தற்பொழுது தான் நடிக்கும் பங்கள் எல்லாம் வெற்றிப்படமாகக் கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். அத்தோடு இவர் நடித்த பல படங்கள் தேசிய விருது பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.அத்தோடு இவருக்கு தற்பொழுது ஏராளான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே.

மேலும் தனுஷ் இப்போது The Gray Man என்கிற ஆங்கில படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் உள்ளார்.அத்தோடு அவர் தனது குடும்பத்துடனும் நேரம் செலவழித்து வருகிறார்,அவ்வப்போது படக்குழுவுடன் அவர் எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது எனலாம் .

அண்மையில் தனுஷின் கர்ணன் படம் திரையரங்கில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த திரைப்படம் மொத்தம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாம். தமிழில் உருவான ஒரு படத்தை இத்தனை மொழிகளில் டப் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: