தனுஷ் ஹிந்தியில் நடித்த “அட்ராங்கி ரே ”படத்தின் ட்ரெய்லர்- சூப்பர் லவ் ஸ்டோரி

412

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் சாதனை படைத்திருக்கின்றது. அத்தோடு இவரது படங்கள் பல தேசிய விருது பெற்றுள்ளதும் தெரிந்ததே.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது மாறன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் தனுஷ் , பாலிவுட் நடிகர் அக்சய் குமார் , நடிகை சாரா அலி கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ” அட்ராங்கி ரே “.ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ள இந்த திரைப்படம் காதல் மற்றும் இசை கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. டி-சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆப் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

தனுஷ் மற்றும் அக்சய் குமார் என இருவரையும் காதலிக்கும் கதாபாத்திரமாக நடிகை சாரா அலி கான் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.