மீண்டும் லீக்கான தனுஷ், நித்யா மேனன் படத்தின் வீடியோ-ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படமும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. தமிழில் மட்டுமல்லாது , தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இவர் துள்ளுவதோ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது வாத்தி ,நானெ வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இதுமட்மின்றி ஹாலிவுட்டில் இவர் நடித்துள்ள தி கிரே மேன் திரைப்படமும் வெளியாக காத்திருக்கின்றது.

இந்நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் திருச்சிற்றம்பலம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

படத்தில் வரும் திருவிழா பாடல் வீடியோ காட்சி கசிந்துவிட்டது. கோபித்துக் கொண்டு செல்லும் நித்யா மேனன் பின்னாடியே செல்கிறார் தனுஷ். மேலும் அந்த வீடியோவை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்று தனுஷ் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தனுஷ், நித்யா மேனன் வரும் பாடல் காட்சி கசிவது இது முதல் முறை அல்ல. முன்னதாக தனுஷும், நித்யா மேனனும் நடுத்தெருவில் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ கசிந்துவிட்டது.மேலும் அந்த வீடியோவுக்கு யாரோ ஒருவர் மின்சார கனவு படத்தில் வந்த வெண்ணிலவே வெண்ணிலவே பாடலை மிக்ஸ் செய்து வெளியிட்டார். அந்த பாடலுக்கும், தனுஷ், நித்யா மேனன் போட்ட ஸ்டெப்ஸுக்கும் பொருத்தமாக இருந்தது.

அத்தோடு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடக்கும்போது வீடியோ கசிந்திருப்பதால் இதற்கு ரசிகர்கள் யாரும் காரணமாக இருக்க முடியாது. படக்குழுவை சேர்ந்த யாரோ செய்த வேலையாகத் தான் இருக்க வேண்டும்.இல்லை என்றால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டுமென்றே கசிய விட்டிருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்