• Apr 19 2024

ஏர்போர்ட்ல சைலண்ட்டா போஸ் கொடுத்த தனுஷ்.. அடுத்த சம்பவத்துக்கு ஆயத்தம்..!

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் நடந்த படமாக உருவாகிறது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.


இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது.  இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 


இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தமது டுவிட்டர் பக்கத்தில் தனுஷின் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்து, கேப்டன் மில்லர் லுக்கில் உள்ள எங்கள் ஹீரோவின் சாதாரண அதிகாரப்பூர்வமற்ற புகைப்படம் கூட இணையத்தை அதிர வைக்கும்" என தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.


 இந்த புகைப்படம் விமான நிலையத்தின் பின்னணியில் அமைந்துள்ளது போல தெரிகிறது. தனுஷ் முக கவசம் அணிந்து, புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement