• Apr 26 2024

கோபத்தில் விக்ரமனை ஷேவ் செய்த கமல்... கதறி அழுது கண்ணீர் வடிக்கும் தனலட்சுமி... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நாளுக்கு நாள் அழுகை, சண்டை , கண்ணீர் என நகர்ந்து சென்ற வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் தற்போது 35 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கின்றது. 

அதிலும் குறிப்பாக கமலின் எபிசோட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். இதில் வார இறுதியில் யாரவது ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்றுவது வழமை. இந்நிலையில் இன்று யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "உங்களுடைய விழிப்புணர்வுக்காக ஒரு படம் போடப்போகின்றேன்" என்று கூறி குறும்படம் போட்டுக் காட்டுகின்றார். மேலும் "நீங்க சிரிக்கிற மாதிரி நானும் சிரிச்சிட்டுப் போற அளவிற்கு நான் நல்லவன் இல்லை.

பிக்பாஸ் ஒரு ரூல்ஸ் வைச்சாரு, அந்த ரூல்ஸ் படி நீங்க விளயாடல, இந்த வெற்றி உங்களிடமிருந்து பறிக்கப் படுகின்றது" என தனலட்சுமியை நோக்கிக் கூறுகின்றார். அத்தோடு "நீங்க நாமினேஷனில் இருந்து ப்ரீ என்ற அந்த உரிமை உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு நேர்மையாக விளையாடிய விக்ரமனுக்கு அது கொடுக்கப்படுகின்றது" எனக் கூறுகின்றார்.

அதற்கு உடனே தனலட்சுமி அழுகின்றார். இதனைப் பார்த்த கமல் "தனலட்சுமி அழுதால் ஆறுதல் சொல்வதும் நான் தான்" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ ஆனது ரொம்பவே மாஸாக வந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement