• Apr 19 2024

செல்லக்குட்டி தனா உன்னை நான் தப்பாத் தொட்டேனா?-போன் போட்டு கேட்ட அசீம்..முகத்தில் கரி பூசிய தனலட்சுமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல்வேறு மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது.இருப்பினும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.மேலும் கடந்த மாதம் முடிவடைந்த பிக்பாஸ் சீன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அசீம் தெரிவு செய்யப்பட்டார். இதனால் கலவையான விமர்சனங்களே அவருக்கு கிடைத்து வருகின்றது.

அசீமுக்கு டைட்டில் தந்த நிலையில் தான் கிட்டத்தட்ட ஒரு வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பேசு பொருளாக உள்ளது.அசீம் தனலட்சுமியை நெஞ்சை பிடித்து தள்ளி விட்டதாக டேய்.. எங்க கை வச்சி எப்படி தள்ளி விட்ட என தனலட்சுமி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணதை பார்த்த ரசிகர்கள் அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கொந்தளித்தனர். அந்த ஹாஷ்டேக்கும் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. ஆனால், அதெல்லாம் செம செட்டப் நடிப்பு என்பது தெரிந்த நிலையில், அசீமுக்கு ரெட் கார்டு எல்லாம் கொடுக்காமல் டைட்டில் வின்னர் பட்டத்தை கொடுத்து 50 லட்சம் மற்றும் சொகுசு கார் பரிசும் கொடுத்து பெருமைப்படுத்தினர் என்றும் கூறி வருகின்றனர்.


இந்நிலையில், தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு பேட்டி மூலம் பதில் அளித்து குற்றத்தையும் தப்பான பேச்சுக்களையும் துடைக்க அசீம் ரொம்பவே அயராது பாடுபட்டு வருகிறார். வெற்றியை கொண்டாட முடியாமல் ஒவ்வொருத்தருக்கும் நான் தப்பானவன் இல்லை என்பதை சொல்லி வரும் அசீம் பிரபல சேனல் நடத்திய பேட்டியில் தனாவுக்கு போன் போட்டு செல்லக்குட்டி என்ன பண்றீங்க என கேட்க ஆரம்பித்து, அந்த விஷயத்தை பற்றியும் பேசியுள்ளார்

ஹாய் செல்லக்குட்டி தனா என்ன பண்றீங்க.. நம்ம ரெண்டு பேர் பத்தி தப்பா ஒரு விஷயம் போயிட்டு இருக்கு.. அண்ணன் உன்னை ஏதாவது தப்பான இன்டென்ஷன்ல மீன் பண்ணி தள்ளி விட்டேனா செல்லம்ன்னு கொஞ்ச, அதற்கு தனா கொடுத்துள்ள பதில் தான் அத்தனை நாள் தனாவுக்காக கம்பு சுத்திய ரசிகர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.


அது சும்மா நாம பொம்மை டாஸ்க் விளையாடும் போது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தள்ளி விட்டு விளையாடினோமே, அதைத்தான் சொல்றாங்களா அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க எனக்கு எப்போவுமே என் அண்ணா தான் என அசீம் தன்னை அப்யூஸ் பண்ணலன்னு தனாவே சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார்.


அதே போல அந்த பேட்டியில் பேசிய அசீம் நண்பர் விக்ரமனை பூமர்னு சொல்லாதீங்க அது ரொம்ப தப்பு. ஷோவில் நான் அவருக்கு பூமர்னு கொடுத்தது ஒரு விளையாட்டுக்காக, ஆனால் ரசிகர்களாகிய நீங்க அவரை பூமர் என்றோ என்னை கிளவும் என்றோ சொல்வது நல்லா இல்லை என்று விக்ரமன் குறித்தும் பேசியிருந்தார். விக்ரமனுக்கும் நிகழ்ச்சியில் இருந்து போன் போட்ட அசீம் ரிங் போயும் விக்ரமன் எடுக்காத நிலையில், நண்பர் ரொம்ப பிசியாக இருப்பார் என பேசி சமாளித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement