• Apr 19 2024

எதிர் நீச்சல் சீரியல் நடிகையின் முக்கிய விழாவில் கலந்து கொண்ட தேவயாணி- இன்னும் யாரெல்லாம் வந்திருந்தாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோலங்கள் சீரியலில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சத்யபிரியா.  தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 50 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.


 தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின்னர் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரில் நடிக்க துவங்கினார் சத்யபிரியா. அஞ்சலி, எதிர் காற்று, அக்னி பார்வை, ரோஜா, மேட்டுப்பட்டி மிராசு, லேசா லேசா, மாயி, காதலுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.


படங்களில் வாய்ப்புகள் குறைந்ததை  அடுத்து தொடர்ந்து சீரியலில் களமிறங்கினார். இது வரையில் இவர் பல சீரியலில்களில் நடித்து விட்டார் அதில் முக்கியமான சீரியல் என்றால் அது இயக்குநர் திருச்செலவம் இயக்கிய கோலங்கள் தான். இது இவருக்கும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது திருச்செல்வம் இயக்கிவரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில்தான் இவர் தன்னுடைய பிறந்த நாளை கடந்த மார்ச் 4ஆம் தேதி கொண்டாடினார். இவரது பிறந்த்நாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் கோலங்கள் சீரியல் கதாநாயகி தேவயானி, நளினி உள்ளிட்டோரும் இவர்களுடன் கலந்து கொண்டு நடிகை சத்யபிரதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இந்த சந்திப்பில் கோலங்கள் நாயகன் மிஸ் ஆகி இருக்கிறார்.




Advertisement

Advertisement

Advertisement