• Apr 20 2024

பிக்பாஸ் வனிதாவின் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகளைக் கேட்ட தேவயானி- பரபரப்பான புரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது ரி என் ரி கொடுத்து சீரியல்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் ஷு தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியலில் தற்பொழுது தேவயானி பணியாற்றிவரும் எப்எம் சேனலில் ஒரு பேட்டி கொடுப்பதற்காக நடிகை வனிதா வருகிறார். அந்த பேட்டிகான கேள்விகளை தேவயானி தான் எழுதி கொடுக்கிறார்.

வனிதாவின் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகள் மற்றும் அவர் பப்ளிசிட்டிக்காக செய்யும் விஷயங்கள் என கேள்விகள் இருந்ததால் அவர் கடும் கோபமாகி எழுந்து வெளியில் வந்து யார் கேள்வியை எழுதியது என கேட்கிறார். இந்த புரோமோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement