• Apr 20 2024

பொன்னியின் செல்வன் படத்தின் தேவராளன் ஆட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படமானது இந்த மாதம் 30ம் திகதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், டிரெய்லர், பாடல்கள் என்பன அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இந்த படத்தின்  அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளது. 


இதில் பொன்னி நதி  மற்றும் சோழா சோழா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே , சொல் , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்களும் வெளியாகி உள்ளன.


இதில் தேவராளன் ஆட்டம் பாடலை யோகி சேகர் பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த தேவராளன் ஆட்டம் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.  பாண்டிய ஆபத்துதவிகள் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் ஸ்டில்களும் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement