• Apr 18 2024

வீட்டை இடிச்சிட்டாங்கள்...விஜய் டிவி ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ.நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்பபோவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜாக்லின். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'கானா காணும் காலங்கள்' மற்றும் 'ஆண்டாள் அழகர்' ஆகிய சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார்.


சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளித்திரையில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 'கோலமாவு கோகிலா' என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்து அசத்தி இருந்தார். அத்தோடு இவர் நடித்து வந்த 'தேன்மொழி' என்ற சீரியலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது youtube வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது அதில் தனது கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டு சாலையை விரிவாக்கும் பணிகளுக்காக இடித்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.


பாதி வீட்டை இடித்துவிட்டார்கள் என்பதால், மீதம் இருக்கும் வீட்டை renovate செய்து, அதன் மேலேயே சில அறைகளை கட்டி வருகிறாராம் என குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement