• Apr 24 2024

தீபிகா படுகோனுக்கு பிரபாஸ் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் இறுதியாக  'ராதே ஷியாம்'திரைப்படம் வெளியாகியிருந்தது. காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரபாஸ் 4 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தில் நடித்து வருகின்றார்.இவருடன் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தினை வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கிறார். 


முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 


இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனின் 37-வது பிறந்தநாளை முன்னிட்டு 'ப்ராஜெக்ட் கே' படக்குழு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளது. "இருளில் உள்ள நம்பிக்கை ஒளி" என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனால் தீபிகா படுகோனுக்கு பலரும் வாழ்த்துத்  தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement