• Mar 29 2023

“டேய் ஐயப்பன் ராமசாமி...நீ என் கைல கிடைச்சா...” கொந்தளித்து வீடியோ வெளியிட்ட TTF வாசன்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

ஐயப்பன் ராமசாமியின் வீடியோ ஒன்று வெளியாகி பல மீம்ஸ்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்ற நிலையில்  டிடிஎஃப் வாசனும் தன் பங்கிற்கு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 

அதில் அவர் மிகவும் கோபமாக “நீ மட்டும் என் கையில் கிடைத்தால் உன் மூஞ்சி முகரை எல்லாம் உடைத்து விடுவேன்” என்று கூறியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரு செய்தி என்றால் அது பல யூடியூபர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியினரிடம் காசு வாங்கிக்கொண்டு சிலருக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள் என்று வீடியோ ஆதாரங்கள் வெளியாகி உள்ளது. 

மதன் ரவிச்சந்திரன் என்கிற பத்திரிக்கையாளர் முன்னெடுப்பில் இது போன்ற செயல்கள் மறைமுகமாக கேமராவில் பதிவாக்கப்பட்டு தற்போது காணொளிகளாக வெளியாகி உள்ளது. அதில் பல youtube சேனல்களை சேர்ந்த தொகுப்பாளர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டும், பார்களில் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டும் இலவசமாக பரிசு பொருட்களை பெற்றுக் கொண்டும் இருக்கின்றனர் இந்த வீடியோக்கள் வெளியான பின்பு பலரும் அந்த ஆங்கர்கள் மீது கோபத்தில் உள்ளனர். 

அதில் குறிப்பிடத் தகுந்த நபராக இருப்பவர் ஐயப்பன் ராமசாமி. இவர் வளர்ந்து வரும் பத்திரிகையாளர்களில் ஒருவராக உள்ளார். தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவராக இருந்து வந்தார். அத்தோடு பல சர்ச்சையான நபர்களை பேட்டி எடுத்து அவர்களை கிடிக்குபிடி கேள்விகளால் மடக்கியும் இருந்தார். இதனால் ஐயப்பன் ராமசாமிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இவர் சமீபத்தில் டிடிஎஃப் வாசனையும் நேர்காணல் செய்திருந்தார். அப்போது டிடிஎஃப் இடம் பல கிடுக்கப்படியான கேள்விகளை கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கு ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் டிடிஎஃப் வாசன் எழுந்து வெளிநடப்பு செய்திருந்தார். மேலும்  அந்த வீடியோ வெளியான பின்னர் பலரும் டிடிஎஃப் வாசனை ட்ரோல் செய்தும் கலாய்த்தும் பதிவிட்டு வந்தனர். பதில் சொல்ல முடியாமல் ஓடுகிறாயா? என்று வாசனை மிகவும் கேலி செய்து மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில் ஐயப்பன் ராமசாமியின் புது வீடியோ வெளியாகி இருப்பதால், கடுப்பான டிடிஎஃப் வாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இன்ஸ்டாகிராமில் உன்னை பின் தொடரும் பெண்களை சாப்பிட்டு விடுவாயாமே? என்றும், உன்னை எல்லாம் மரியாதை குடுக்கவே தகுதி இல்லாத ஆள், நீ மட்டும் என் கையில் கிடைத்தால் உன் மூஞ்சி முகரை எல்லாம் உடைத்து விடுவேன், அன்றைக்கு போட்டிருந்த அதே சட்டையை தற்போதும் போட்டு இருக்கிறேன் என்று மிக கோபமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement

Advertisement