• Apr 19 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து கர்ப்பமான மருமகள்கள் – வச்சி செய்த KPY சாம்பியன்ஸ்..! நீங்களே கலாய்ச்சிட்டா எப்படி?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பழமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதோடு தமிழில் கடந்த சில மாதங்களாகவே சீரியல் கொஞ்சம் அரைத்த மாவையே அரைத்து வருகிறது. இந்த தொடரில் சமீப காலமாக கர்ப்பமாக இருப்பதை மட்டும் தான் காண்பித்து வருகின்றனர்.

இந்த தொடரில் ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் கர்பமாக இருப்பதாக காண்பிக்கப்பட்டது. ஏற்கனவே பல மருத்துவர்கள் முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறிய நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் தாண்டி சமீபத்தில் இந்த தொடரில் மூத்த அன்னியான தனம் கர்ப்பமாக இருப்பது போல காண்பிக்கப்பட்டு இருந்தது.

இப்படி ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து பெண்கள் கர்ப்பமாகி வருவது போல காண்பிக்கப்பட்டு வரும் இந்த தொடரை “என்ன கன்டென்ட் கிடைக்காமல் இப்படி ஒவ்வொருவரா கற்பமாக்குறீங்களா? இது பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்ல வந்தியன் ஸ்டோர்ஸ், கர்பம் ஸ்டோர்ஸ் என்று கலாய்த்து பதிவிட்டு வந்தனர். இப்டி ஒரு நிலையில் இந்த தொடரை Kpy நிகழ்ச்சியிலும் பங்கமாக கலாய்த்து உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்களே கலாய்ச்சிகிட்டா எப்படி என்று கமண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement