உயிருக்கு போராடும் நடன நடிகர் சிவசங்கர்… பணம் கட்ட தவிக்கும் மகன்கள்..இவ்வாறு உதவி செய்யுங்கள்..!

728

திரைப்படத் துறையில் நீண்ட காலமாக சறந்த நடன மாஸ்டராக வலம் வருபவர் சிவசங்கர்.மேலும் பல நடிகைகளுக்கு நடன பயிற்சிகளை அளித்து புகழ் பெற்று விளங்கிய இவர் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

அதன்படி சந்தானம் நடித்த, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோல் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிவசங்கர் மாஸ்டர் தோன்றி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திலும், சூர்யாவுடன் படம் நெடுக வரும் முக்கிய கதாபாத்திரத்தில் சிவசங்கர் மாஸ்டர் நடித்திருந்ததை யாரும் மறக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.

எனினும் இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொவிட் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்தோடு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதற்கு அதிகம் செலவாகும் என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினரிடத்தில், அவருடைய சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் சிவசங்கர் மாஸ்டருக்கு விஜய் மற்றும் அஜய் என்கிற மகன்கள் இருக்கும் நிலையில், அவரது மகன் அஜய் கிருஷ்ணாவின் தொடர்பு எண்ணுடன் சேர்த்து, பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.