• Apr 19 2024

அழுது புலம்பும் ஈஸ்வரி-மறுபடியும் ராதிகா வீட்டிற்கு செல்லும் கோபி-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கோபி ராதிகா வீட்டுக்கு சென்று நீ மும்பைக்கு போக போறாய் என கேள்வி பட்டேன்.அது உண்மையா எனக் கேட்கின்றார்.அதற்கு ராதிகா கோபத்தில் நான் எங்க போனாலும் உங்களிட்ட சொல்லிட்டு போக எங்க ரிலேசன் அப்படியா இருக்கு என கேட்கின்றார். அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு உங்களால நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்துட்டோம் நீங்க கொடுத்த சந்தோஷமே போதும் என அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.

மேலும் இருவரும் சத்தமாக பேசிக் கொண்ட சத்தம் கேட்டு மயூ வெளியே வர அவரை உள்ளே போகச் சொல்லி ராதிகா அதட்ட பிறகு கோபி வீட்டிலிருந்து வெளியே கிளம்பியது ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் அவரை திட்டித் தீர்க்கின்றனர்.

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா ராஜேஷ் கூப்பிட்டு மயூ கொடுத்து விடுவோம் அவ அங்கேயாவது போய் சந்தோஷமாக இருக்கட்டுமென கூறுகின்றனர்.

மேலும் இந்த பக்கம் ஈஸ்வரி ராஜேஷ் பேசிய பேச்சை கேட்டு அழுது புலம்புகிறார். என் பையனை நான் அப்படி வளர்க்கேல்லை. என்னதான் நடந்துச்சு சொல்லுங்க என்னமோ என்கிட்ட மறைக்கிறீங்க என கோபியின் அப்பாவிடம் கேட்க அவர் அமைதியாகவே இருக்கிறார்.

பின்னர் எழில் வந்து பாட்டி விடுங்க தாத்தாவுக்கு இருக்கிற வலியும் வேதனையும் போதும் என சொல்லி அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

உள்ளே சென்ற எழில் என்னதான் பண்றது எது நடக்கக்கூடாதென்று நினைக்கிறோமோ அது நடந்துச்சு. இனிமே கடவுள் விட்ட வழி எல்லாமே சரியாகற நேரத்துல இவன் வந்து எடுத்துட்டான் என தாத்தா சொல்ல இல்ல தாத்தா எதுவும் சரியாகல அவர் இன்னும் இருந்தல ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறதா போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்து இருக்கிறார்.

மேலும் அம்மாவை விவாகரத்து பண்ண போறதா சொல்லி இருக்கார் என சொல்லி வருத்தப்படுகிறார். அத்தோடு தாத்தா நல்லவேளை பாக்கியா இங்கே இல்லை என சொன்ன அம்மாவின் அப்பா மேல எப்பயோ சந்தேகம் வந்துடுச்சு. நாம வருத்தப்படக்கூடாது என்று எதுவும் பேசாமல் இருக்காங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டை விட்டு வெளியே தொடக்கியதை நினைத்து காரில் புலம்பிக்கொண்டு வருகின்றார். நீ இல்லாம என்னால வாழ முடியாது ராதிகா தயவு செய்து புரிந்துகொள் என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement