• Apr 20 2024

பிரபல நடிகர் யூடியூப் மூலம் கோடி கோடியாய் மோசடி....அதிர்ந்து போன திரையுலகம்...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முக்கிய நடிகராக திகழ்பவர் தான்  அர்ஷத் வர்சி. அர்ஷத் வர்சி அவரது மனைவி மரியா கோரெட்டி, சகோதரர் இக்பால் ஹுசைன் வார்சி  ஆகிய மூவரும் யூடியூப் வீடியோக்கள பலவற்றை பதிவிட்டு வந்துள்னர். 

இவ்வாறுஇருக்கையில் அதன் மூலம் பண மோசடி செய்துள்ளதை செபி அமைப்பு  திடீரென கண்டுபிடித்துள்ளது. இதன் காரணமாக அர்ஷத் வார்சி உட்பட 44 பேர் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அர்ஷத் வர்சி தவறான வீடியோக்கள் மூலம் இரண்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டார்களுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகின்றது. இதனால் குறிப்பிட்ட அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அர்ஷத் வர்சிக்கும் அதிக லாபம் கிடைத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது. ஷார்ப்லைன் பிராட்காஸ்ட் லிமிடெட், சாதனா பிராட்காஸ்ட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்காக தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார் அர்ஷத் வர்ஷி.


நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோரெட்டி உள்ளிட்ட 45 தனிநபர்கள், நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில், சாதனா பிராட்காஸ்ட் லிமிடெட், ஷார்ப்லைன் பிராட்காஸ்ட் லிமிடெட் பங்குகளை வாங்க தவறான வீடியோ மூலம் அர்ஷத் வர்சி பரிந்துரைத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அர்ஷத் வார்சி, மரியா கோரெட்டி ஆகியோரைத் தவிர, சாதனா பிராட்காஸ்ட் லிமிடெட்டின் சில விளம்பரதாரர்களும் பங்குச் சந்தையில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

யூடியூப் சேனல்களில் தவறான வீடியோக்கள் வெளியிட்டதன் மூலம், 54 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோதமாக மோசடி செய்யப்பட்டுள்ளதாம். அத்தோடு, அர்ஷத் வர்சி 29.43 லட்சம், மரியா கோரெட்டி 37.56 லட்சம், இக்பால் ஹுசைன் வார்சி 9.34 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளனர். சாதனா பிராட்காஸ்ட் லிமிடெட், ஷார்ப்லைன் பிராட்காஸ்ட் லிமிடெட் ஆகியவற்றின் விலை நிர்ணயம், பங்குகளை ஆஃப்லோட் செய்வதில் சில நிறுவனங்கள் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து செபி இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.


2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை SEBI நடத்திய விசரணையில், இரு நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு , சாதனா பிராட்காஸ்ட் லிமிடெட் பற்றிய மிஸ் லீடிங் வீடியோக்கள் இரண்டு YouTube சேனல்களில் அப்லோடிங் செய்யப்பட்டுள்ளன. 2022 ஜூலை இரண்டாம் பாதியில் ஷார்ப்லைன் பிராட்காஸ்ட் லிமிடெட் பற்றிய வீடியோக்கள், மிட்கேப் கால்ஸ், பிராஃபிட் யாத்ரா ஆகிய யூடியூப் சேனல்களில் அப்லோடிங் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், செபியின் வழிகாட்டுதல்களுக்கு மாற்றாக இந்நிறுவனங்கள் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இதுபோன்ற தவறான வீடியோக்களால், சிறிய பங்குதாரர்களின் எண்ணிக்கை 2,167லிருந்து 55,343ஆக அதிகரித்துள்ளது. ஷார்ப்லைன் பிராட்காஸ்ட்டில் சிறு பங்குதாரர்கள் 517ல் இருந்து 20,009 வரை அதிகரித்துள்ளனர். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட அர்ஷத் வர்சி உட்பட 45 நிறுவனங்களும் அடுத்த உத்தரவு வரும்வரை எந்த வகையிலும் பத்திரங்களை வாங்குவது, விற்பது அல்லது பரிவர்த்தனை செய்வதிலிருந்து செபி அமைப்பு தடை விதித்துள்ளது. அத்தோடு , வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் உட்பட எந்தச் சொத்துகளையும், செபியின் முன் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement