• Apr 19 2024

தமிழ் டிரெண்டிங் பாடலுக்கு தங்கச்சியுடன் டான்ஸ் ஆடிய கிரிக்கெட்‌ பிரபலம்..! லைக்ஸுகளை குவிக்கும் ரசிகர்கள்....

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா  சேர்ந்து நடித்தனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்தனர். 

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருந்தார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குநராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்தனர்.‌இந்த திரைப்படம், 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 இந்த படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமன் இசையில் அமைந்த இந்த திருமண கொண்டாட்ட பாடல், தற்போது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது. 

பிரபலங்கள் பலர் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட்டு வருகின்றனர். தமன் இசையில் விவேகா பாடல் வரிகளில் இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தங்கை ஷ்ரேஸ்டா ஐயர், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடலுக்கு தனது அண்ணன் ஷ்ரேயாஸ் ஐயர் உடன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.   ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றன.



Advertisement

Advertisement

Advertisement