• Mar 28 2023

ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல்- வரலாற்று சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் திரைப்படம்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டியார் மற்றும் ராம்சரண் ஆகியோர் கதாநாயகன்களாக இப்படத்தில் நடித்திருந்தனர்.

வரலாற்றுக் கதையம்சம் கொண்டதாக உருவான இப்படம் வசூலில் அள்ளிக் குவித்ததோடு பல விருதுகளையும் பெற்று வருகின்றது.இந்த நிலையில் 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி இவ்விருதை பெற்றுக்கொண்டார். 


இதன்மூலம் இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது பெறும் முதல் இசையமைப்பாளர் என்கிற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார்.இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement